மஹாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கடற்கரை, நீர்நிலைகளில் திரளான மக்கள் புனித நீராடினர்

0 1386

மஹாளய அமாவாசையையொட்டி கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் திரளான மக்கள் குவிந்து புனித நீராடி, முன்னோர்களின் ஆத்மாக்களை சாந்திபடுத்தும் வகையில் எள்ளுப்பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

இராமேஸ்வரத்தில் திரளான மக்கள் குவிந்து அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய மக்கள், கடற்கரையில் எள்ளு, பிண்டம் வைத்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் திரளான பொதுமக்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

 


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆறு புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

 

மஹாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கடற்கரை, நீர்நிலைகளில் திரளான மக்கள் புனித நீராடினர்

எள்ளுப்பிண்டம் வைத்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments