உன்னிய ஒன்னும் பன்னமாட்டேன்.. எங்கிட்ட வா... டேய்... நீ ஓடுறா.... பள்ளிக்காதலர்களுக்கு நேர்ந்த சோகம்..! பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி ஆடியோ

0 3518

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே 8 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி கரும்புக் காட்டிற்குள் அழைத்துச்சென்று பலாத்காரம் செய்ததாக தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். உடன் சென்ற மாணவரை கரும்பால் அடித்து விரட்டி அரங்கேறிய கொடுமை சம்பவத்தின் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சிறுமி என்றும் பாராமல்.... காண்டுமிராண்டி போல அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள காமுகன் மணி இவன் தான்..!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் 8 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவி ஒருவர் தனது நண்பரான 12 ஆம் வகுப்பு மாணவருடன் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காக்கி நிற பேண்டுடன் சென்ற நபர் ஒருவர் இருவரையும் அழைத்து விசாரிப்பது போல தனியாக இங்கே என்ன பண்றீங்க ? உங்கள விசாரிக்கனும் காவல் நிலையம் வாங்க ? என்று அழைத்துள்ளார். பயந்து போன அவர்கள் இருவரையும் அருகில் இருந்த கரும்புக்காட்டுக்குள் அழைத்துச்சென்று மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட தொடங்கி உள்ளான் அந்த ஆசாமி. இதனை தடுக்க போராடிய, மாணவர் இது மாதிரி பன்னாதீங்க... என்று கெஞ்சியும் அந்த காமுகன் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது

மாணவர் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், அங்கிருந்த கரும்பு ஒன்றை முறித்து மாணவரை கதற கதற கடுமையாக தாக்கி அடித்து விரட்டி உள்ளான்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பரசுரெட்டி பாளையம் கிராமத்தைச் சார்ந்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் மணி என்பவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து சம்பவத்தின் போது பதிவான ஆடியோவை கைப்பற்றினர்.

போக்சோ வழக்கில் மணியை கைது செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமல்ல காதல் ஜோடிகள் தனிமையான இடம் தேடி சென்றால் என்ன மாதிரியான வில்லங்கம் வரும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments