திமுக மகளிர் உரிமை மாநாடு - சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை

0 1824
திமுக மகளிர் உரிமை மாநாடு - சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை

சென்னையில் இன்று நடைபெறும் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பங்கேற்கிறார்.

தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இதில் பங்கேற்க சென்னை வந்த சோனியாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். அமைச்சர்கள், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments