ஊட்டி சாம்பாரில் எலிக்குட்டி அம்மாஸ் கிச்சனுக்கு பூட்டு உணவுப்பிரியர்களே உஷார்..!
ஊட்டியில் உள்ள அம்மாஸ் கிச்சன் என்ற தனியார் உணவகத்தில் தோசை சாம்பாரில் எலிக்குட்டி இறந்து கிடப்பதாக, உணவு சாப்பிட்ட ராணுவ வீரர் அளித்த புகாரின் பேரில் உணவகம் இழுத்துப்பூட்டப்பட்டது
ஊட்டியில் உள்ள அம்மாஸ் கிச்சன் என்ற உணவகத்தில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது தட்டில் ஊற்றப்பட்ட சாம்பாரில் சிறிய அளவிலான எலிக்குட்டி கிடப்பதாக புகார் தெரிவிக்கும் காட்சிகள் தான் இவை..!
நாகர்கோவிலை சேர்ந்த ஜெகன் என்ற இராணுவ வீரர் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார் அவர் இங்குள்ள அம்மாஸ் கிச்சன் என்ற உணவகத்தில் காலை உணவாக தோசை வாங்கிச்சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சாம்பாருக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான உயிரினம் செத்துக்கிடப்பதை பார்த்து மிரண்டு போனார்
அதனை விரலால் புரட்டி பார்த்த அவர் பிறந்து சில நாளேயான எலிக்குட்டி சாம்பாருக்குள் விழுந்து செத்து சுறுங்கிக்கிடப்பதாக உணவௌ பொருள் பாதுகாப்புத்துறையினருக்கு புகார் அளித்தார்
செல்போனில் பேசிய உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரி, அது வெண்டைக்காயில் உள்ள புழுவாக இருக்கலாம் என்று கூறிய நிலையில் நேரில் வந்து ஓட்டலை ஆய்வு செய்த பின்னர் அது எலியாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
மேலும் அங்கு முந்தின நாள் தயாராகி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கிரில் சிக்கனை கைப்பற்றி அதனை பினாயில் ஊற்றி அழித்தார்
எலி சாம்பார் பரிமாறிய, ஓட்டலை ஒரு வாரத்துக்கு இழுத்து மூடவும், ஓட்டலின் கிச்சனை பராமரிப்பு செய்த பின்னர் தனது ஆய்வுக்கு பின்னரே ஓட்டலை திறக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் வழங்கினார். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஊட்டியில் உள்ள உணவகங்களை அதிகாரிகள் சுழற்சி முறையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments