தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை உத்தரவு
தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், உரிய பங்கு நீர் திறக்கப்பட வேண்டும் என தமிழகம் தரப்பிலும், காவிரியில் திறக்கும் அளவிற்கு போதிய தண்ணீர் இல்லை என கர்நாடகா தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, வரும் 16ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments