நாகை - காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை நாளை காலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை நாளை காலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்தார்.
கப்பல் மாலுமிகள், மற்றும் துறைமுக அலுவலர்களோடு ஆட்சியர் ஆலோசனை செய்தார். துவக்க விழா சிறப்பு சலுகையாக 75 சதவீத தள்ளுபடி விலையில் டிக்கெட் ஒன்று 2803 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயணம் மேற்கொள்வோர் பாஸ்போர்ட், மற்றும் விசாவுடன் நாகை துறைமுகத்தின் உள்ளே அமைந்துள்ள பயணிகள் முனையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
Comments