கடலூரில் வீடு கட்ட போலியாக அனுமதி வழங்கி அரசாங்க முத்திரை மற்றும் கையெழுத்து போட்ட நபர் கைது
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலில் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்ட பல வீடுகளுக்கு போலி திட்ட மற்றும் கட்டிட அனுமதி வழங்கப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடலூர் ஆணைக்குப்பத்தை சேர்ந்த சேதுபாரதி என்பவர் போலியான அரசாங்க முத்திரை, மற்றும் போலியான எண் அளித்து வீடு கட்ட அனுமதி வழங்கியது தெரியவந்தது.
மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனரின் போலியான கையொப்பம் போட்டு மனை பிரிவுகளுக்கும் ஒப்புதல் அளித்த அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடியில் மாநகராட்சி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
Comments