காசாவில் 3600 இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்

0 4538

காசாவில் தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்து 3600 இடங்களில் இஸ்ரேல் குண்டுகளை வீசி வான் தாக்குதல் தொடுத்தது.

இதற்காக சுமார் 6 ஆயிரம் சுற்றுக்கு வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹமாஸின் மூத்த தளபதிகள், சிலர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காசா கரையில் உள்ள ராணுவ நிலைகள், போர்க்கால அறைகள், ஆயுத உற்பத்தி கிடங்குகள், தீவிரவாதத் தலைவர்கள் பதுங்கியுள்ள இருப்பிடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பிரஸல்சில் 31 நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் ஹமாசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவா காலண்ட் நாஜி ஜெர்மனியில் யூதர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் இது1943ம் ஆண்டு அல்ல 2023 என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments