இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல் - வெளியுறவு அமைச்சகம்

0 1642

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை தீவிரவாதத் தாக்குதல் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி,  அண்டை நாடுகளாக இருக்கும் பாலஸ்தீனம், இஸ்ரேல் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் குறித்து கவலை தெரிவித்த அரிந்தம் பக்சி, சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைபிடிப்பதும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதும் உலகளாவிய கடமை என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments