அமெரிக்கா இருக்கும் வரை இஸ்ரேல் தனித்து போராட வேண்டியதில்லை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன்

0 5252

அமெரிக்கா என்ற நாடு இருக்கும் வரை ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தனியாக போராடத் தேவையில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல் அவிவ் நகருக்கு நேரில் சென்ற பிளிங்கன், போர்ச் சூழலை பயன்படுத்தி எந்த நாடாவது இஸ்ரேலை தாக்கினால் அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்காது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா அனுப்பியுள்ள ஆயுதங்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு வந்துவிட்டதாகவும், இஸ்ரேலுக்குத் தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டியின் போது உடனிருந்த இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாஹு, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைப் போலவே ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments