உத்தரகண்ட் பனிமலைச் சிகரங்களில் உள்ளூர் மக்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து பிரதமர் மோடி வழிபாடு

0 1156

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சிவ பெருமானும் பார்வதியும் தியானம் செய்ததாக கருதப்படும் பார்வதிகுண்ட் சிகரத்தில் பிரார்த்தனை செய்தார்.

அப்பகுதி மக்களின் பாரம்பரிய வெண் நிற உடைகளை அணிந்திருந்த பிரதமர் உத்தரகாண்டின் பனிமலைச் சிகரங்களை நோக்கி வழிபாடு செய்தார்.

அங்கிருந்து, இந்தியா-திபெத் எல்லையில் உள்ள சிவஸ்தலம் என்று அழைக்கப்படும் கன்ஞ் மலை கிராமத்துக்கு சென்ற பிரதமர், அங்கு வசிப்பவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பாரம்பரிய மேளங்களை இசைத்தார்.

இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களை சந்தித்துப் பேசிய பின்னர் அல்மோரா மாவட்டத்தில் 224 கற்கோயில்கள் அமைந்துள்ள ஜகேஷ்வர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

இதைத்தொடர்ந்து பித்தோரகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியின் போது உத்தரகண்ட் மாநிலத்துக்கு 4200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் துவக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments