தொலைக்காட்சி பேட்டியில் மனம் திறந்த நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்

0 1320

ஹாலிவுட் ஜோடிகளான நடிகர் வில் ஸ்மித்தும், அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தும் 2016-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வரும் தகவல் தற்போது வெளியாகிவுள்ளது.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜடா பிங்கெட் ஸ்மித் , வில் ஸ்மித்தை பிரிந்த பின்பு 2020-ம் ஆண்டில் பாடகர் அகஸ்ட் அல்சினாவுடன் உறவில் இருந்தாகவும் கூறியுள்ளார்.

வில் ஸ்மித் உடனான பிரிவை இவ்வளவு நாட்கள் ஏன் மறைத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பிங்கெட் ஸ்மித், இருவரும் தற்போதும் காதலித்து வருவதாகவும், விவாகரத்து பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக இருப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய இருவரும் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் பிங்கெட் ஸ்மித் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், மனைவி பிங்கெட் ஸ்மித்தை உருவ கேலி செய்த கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments