இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்க முன்வரும் அமேசான்... இணைய சேவைக்காக 3238 செயற்கைக் கோள்களை ஏவ ஏற்பாடு

0 3814

எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனத்தைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

இதற்காக பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகே நிலை நிறுத்தப்படும் மூவாயிரத்து 236 செயற்கைக்கோள்கள் அடங்கிய தொகுப்பின் உதவியுடன் இணைய தள சேவையை வழங்கும் பிராஜெக்ட் குய்ப்பர் திட்டத்தை இந்தியாவிலும் செயல்படுத்த அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது நடைமுறைக்கு வரும் போது நாடு முழுவதும் விநாடிக்கு ஒரு ஜிகா பைட் வேகம் வரையிலான இணைய தள சேவையை வழங்க முடியும் என்றும், இண்டர்நெட் கிடைக்காத கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளும் பலன்பெறும் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments