டெல்லி விமான நிலையம் அருகே கார் டிரைவரை கொன்றுவிட்டு காரை கடத்திச் சென்ற இருவர் கைது
டெல்லியில், டாக்ஸி டிரைவரைக் கொன்று அவரது உடல் மீது காரை ஏற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் என்ற கார் திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஃபரீதாபாத்தைச் சேர்ந்த பிஜேந்தர் ஷா என்பவருடைய டாக்ஸியில் மீரட்டைச் சேர்ந்த முகம்மது ஆஸிப், முகம்மது மேராஜ் ஆகியோர் ஏறியுள்ளனர்.
டெல்லி கன்டோன்மென்ட் அருகே டிரைவரைத் தாக்கி வெளியே தள்ளிவிட்டு காரைக் கடத்த அவர்கள் முயன்றுள்ளனர்.
அப்போது, சாலையில் விழுந்த டிரைவர் மீது காரை ஏற்றிக்கொன்றுவிட்டு, உடல் காரில் சிக்கியது தெரிந்தும் காரை அவர்கள் ஓட்டிச் சென்றுள்ளனர்.
சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் டெல்லி விமான நிலையம் அருகே ரத்த வெள்ளத்தில் டிரைவர் உடல் சாலையில் விழுந்தது.
வேறொரு காரில் சென்றவர்கள் எடுத்த வீடியோ வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு கார் திருடர்கள் இருவரையும் கைது செய்து காரையும் மீட்டனர். காரில் ஏறியவுடன் துப்பாக்கி முனையில் டிரைவர் பிஜேந்தர் ஷாவிடம் இருந்து பணத்தை அவர்கள் பறித்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
Comments