ராகம் போட்டா ஹாரன் அடிக்கிற.. ஹாரனை கழட்டு மகனே கழட்டு.. கெத்து காட்டிய பெண் ஆர்.டி.ஓ..! பேருந்து ஏற்றி நசுக்கப்பட்ட ஹார்ன்கள்..

0 2987

ராசிபுரம் பேருந்துநிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, தடைசெய்யப்பட்ட பைப் ஹாரன்களைப் பயன்படுத்துவதால் பேருந்துகளில் பிரேக் செயல் இழக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்ததுடன், 10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களையும் பறிமுதல் செய்தார்.

தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கெல்லாம் மனசில ஹார்ன் இசை சக்கரவர்த்தி அனிருத்துன்னு நெனப்பு...!

காது ஜவ்வு கிழியுற மாதிரி ஹார்ன் அடித்துச்சென்ற ராசிபுரம் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு அதிரடி நடவடிக்கையால் கிடுக்கிப்பிடி போட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா இவர் தான்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த ஆர்.டி.ஓ நித்தியா, அங்கு நின்றிருந்த தனியார் பேருந்துகளின் ஹாரன்களை அடித்து பார்த்து அந்த அதிக ஒலிஎழுப்பும் பைப் ஹாரன்களை கழற்ற வைத்து பறிமுதல் செய்தார்

கழற்ற மறுத்தவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்ததால் வேகவேகமாக ஹாரனை கழற்றிக் கையில் கொடுத்தனர்.

வேக்குவம் ஹாரனை ஒலிக்கும் போது பிரசர் குறைந்து பேருந்தில் பிரேக் பிடிக்காது என்று தெரிந்தும், எப்படி அந்த அதிக சத்தம் எழுப்பும் ஹாரனை பயன்படுத்துகிறீர்கள் என்று ஓட்டுனர்களிடம் கடிந்து கொண்டார்

சில பேருந்து ஓட்டினர்கள் முன்கூட்டியே கழற்றிக் கொண்டிருந்த போது கையும் களவுமாக சிக்கினர்.

இன்னும் சில ஓட்டுனர்கள் ஹாரன்களை கழற்றி பேருந்துக்குள்ளும் பெட்டிக்கடையிலும் பதுக்கி வைத்தும் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பைப் ஹாரன்களை டயருக்கு அடியில் வைத்து நசுக்க வைத்தார் ஆர்.டி.ஓ நித்தியா

அங்கு நின்றிருந்த பள்ளிப் பேருந்தை ஆய்வு செய்து, இதுபோன்ற ஹாரன்கள் மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றார்

தொடர்ந்து ஒருவழிபாதையில் வந்த காரை மறித்து அபராதம் விதித்த அவர் கார் ஓட்டுனரை எச்சரித்தார்.

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களை அழைத்து அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்

ஒவ்வொரு அதிகாரிகள் இது போல நேர்மையாக தங்கள் கடமையை செய்தால் போக்குவரத்து விதிமீறல்களும், விபத்துக்களும் குறையும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments