நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரில் தடம் புரண்டு விபத்து.. 21 பெட்டிகள் தடம் புரண்டத்தில் 5 பேர் உயிரிழப்பு
பீகாரில் இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
டெல்லி ஆனந்த் விகாரில் இருந்து அஸ்ஸாமின் கவுஹாத்திக்கு செல்லும் வடகிழக்கு சூப்பர் ஃபாஸ்ட் ரயில் பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இரவு 9 மணி அளவில் வேகமாக சென்றுக் கொண்டிருந்த ரயிலின் 6 ஏசி பெட்டிகள் உள்பட 21 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் கவிழ்ந்துக் கிடந்தன. இதில் ஏராளமான பயணிகள் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விபத்து காரணமாக ஏராளமான ரயில்கள் நகர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான ரயிலின் பயணிகளை ஏற்றிச் செல்ல மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
Comments