ஒரிசா பாலாசோர் ரயில் விபத்தில் உரிமம் கோரப்படாமல் இருந்த சடலங்கள் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

0 1440


ஒரிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமம் கோரப்படாமல் இருந்த கடைசி 9 சடலங்கள் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.

புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இந்த சடலங்கள் எரியூட்டப்படுவதற்காக சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விஜய் அம்ருதா குலாங்கே தெரிவித்தார்.

இந்த ஒன்பது உடல்களையும் சேர்த்து, பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்படாத 28 சடலங்கள் புவனேஸ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 பாலாசோரில் கடந்த ஜூன் மாதம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர், சுமார் 800 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments