வடசென்னை பகுதியில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல்

0 1669

வடசென்னை பகுதியில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சாலைகளில் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் சிறப்பு நடவடிக்கையை சென்னை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டான பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி, அபராதம் செலுத்திய பிறகு வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்த போலீஸார், உரிமை கோரத வாகனங்கள் ஏலம் விடப்படும் எனவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments