திருடு போன மொபைல் போன் குறித்து புகாரளிக்க இந்தியா முழுமைக்குமான இணைய சேவையாக CEIR உருவாக்கம்

0 12885

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் குறித்து இணையம் வழியாக புகாரளிக்கும் வகையில் இந்தியா முழுமைக்குமான தளத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

CEIR என்ற இந்த இணைய முகப்பில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல் நிலையங்களுக்கும் தனித்தனியாக நுழைவு ஐடி வழங்கப்பட்டுள்ளதோடு, தொலைத்தொடர்புத் துறையோடு இணைக்கப்பட்டுள்ளது.

இதனால், புகாரளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த செல்போனின் IMEI முடக்கப்படுவதோடு, அந்த செல்போனில் வேறு ஏதேனும் சிம் இயக்கப்பட்டதும், அதுகுறித்து தொலைத்தொடர்பு துறை மூலமாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கும் வகையில் இணைய முகப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புகாரளித்தவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி தங்களது செல்போன் நிலவரத்தை தெரிந்துக் கொண்டு மீட்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments