அக்.15 ஆம் தேதி வரையில் 4.6 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் இதுவரையில் 3.5 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது -துரைமுருகன்
கர்நாடகா தரவேண்டிய நீர் பாக்கியை பெற, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரையிலான 18 நாட்களுக்கு தமிழகத்திற்கு திறந்து விடப்பட வேண்டிய 4 புள்ளி 6 டி.எம்.சி.தண்ணீரில் 3 புள்ளி 15 டி.எம்.சி மட்டுமே வந்துள்ளதால், மீதமுள்ள நீரை கேட்டு வற்புறுத்துவோம் எனக்கூறினார்.
Comments