காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் சார்பாக கடையடைப்பு போராட்டம்

0 1385

காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், குமராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், வேதாரண்யம் பகுதிகளில் பால் கடைகள், மருந்தகங்களை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

தஞ்சாவூரில் பால், மருந்தகம் மற்றம் சாலையோர தேநீர் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு, மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன நிலையில், சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments