நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவிப்பு

0 3961
நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், கடைகள் திறக்கவும் நிகழ்ச்சிகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன.

காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாகப் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெதன்யாகு மற்றும் நெகெவ் பகுதிகளில், திடீர் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் ஏற்பாடுகளுடன் கடைகளையும் தொழில் நிறுவனங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அனுமதி அளித்துள்ளன.

வியாழக்கிழமை மாலை ஆறு மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமைப் பொறுத்து கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 72 மணி நேரத்துக்குப் பிறகு காஸா எல்லைப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ள

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments