ஹமாசுடனான தாக்குதலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி உறுதி
ஹமாசுடனான தாக்குதலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஹமாஸ் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர்மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேட்டறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்தின் அனைத்து வெளிப்பாடுகளையும் இந்தியா கடுமையாக கண்டிப்பதாகக் கூறிய மோடி, எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.
இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் நேதன்யாகுவிடம் கூறியதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
Comments