திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ஆண் குழந்தையை கடத்திய பெண் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்

0 5649

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்ட பெண் இறந்ததற்கு, அவர் சயனைடு சாப்பிட்டதே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

முத்துராஜ் - ரதி தம்பதியரின் குழந்தையை கடத்தியதாக பாண்டியன் மற்றும் திலகவதியை கடந்த திங்களன்று கோவையில் போலீசார் கைது செய்தனர்.

ஆலாந்துறை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது கைப் பையை போலீசார் பரிசோதித்த போது, உள்ளே சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளும் சயனைடு குப்பி ஒன்றும் இருந்ததாக கூறப்படுகிறது.

விசாரணையின் இடையே நீரிழிவு நோயாளியான தனக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிட்டதாகக் கூறி அதற்கான மாத்திரையை திலகவதி சாப்பிட்டதாக நினைவு கூர்ந்த போலீசார், மாத்திரைக்கு பதில் தன்னிடம் இருந்து சயனைடை திலகவதி விழுங்கி இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

மாவட்ட நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் கோவை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments