வரிஏய்ப்பு விசாரணைக்கு சனிக்கிழமை ஆஜராக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வருமானவரித் துறை சம்மன்
வரும் சனிக்கிழமை அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை 5 நாட்கள் இடைவிடாமல் சோதனை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, ஜெகத்ரட்சகன் தொடர்புடைய லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை என்ற நிறுவனம் ஆறு ஆண்டுகளில் 1050 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படும் புகார் பற்றி நேரில் ஆஜராகி விளக்குமாறு ஜெகத்ரட்சகனுக்கு அனுப்பப்பட்ட சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு முன் வரி விலக்கு பெற்றிருந்த அந்த கல்வி அறக்கட்டளைக்கு பிறகு வரி விலக்கு ரத்து செய்யப்பட்டதாகவும், எனினும் புதிய புதிய பெயர்களில் அறக்கட்டளையின் பெயரை மாற்றி பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments