புதுச்சேரியில் நாசவேலைகளை தடுப்பது போல கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
கடல் வழியாக தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் தொடங்கியுள்ளது. தீவிரவாதிகள் போல் வேடமிட்டு படகுகள் மூலம் கடல் வழியாக ஊடுருவ முயல்பவர்களை தடுத்து பிடிப்பதே இந்த ஒத்திகையின் பிரதான நோக்கமாகும்.
கடலோர காவல்துறையின் தயார்நிலையை மதிப்பிடும் விதமாக கன்னியாகுமரி கடலோர காவல்துறை சார்பில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள பகுதியில் ஒத்திகை நடைப்பெறுகிறது.
வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் படகு மூலம் கடலுக்குள் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியில் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு படகுகளில் ஊடுருவுபவர்களை கடலோர காவல்துறையினர் கண்டறிந்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
புதுச்சேரியில் போலீஸ் குழுக்களை நிறுத்துதல், நாசவேலைகளை தடுப்பது போல பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
Comments