ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி தேடுதல் வேட்டையின் போது இருதரப்பினரிடையே துப்பாக்கிச்சூட்டில் 2 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி

0 1314

ஜம்மு காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அல்ஷிபோரா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரின் பதிலடியில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவனான அப்ரார், பண்டிட் சஞ்சய் சர்மா கொலை வழக்கில் தொடர்புடையவன் என காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments