காவேரி மருத்துவமனையில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் டிஸ்சார்ஜ்

0 27818

சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில், உடல்நிலை சீரானதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர், இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளதாகவும், நாளை டெல்லியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்ளமாட்டார் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments