ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பயிற்சியாளர் மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழப்பு

0 2776

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்ததாக கூறப்படும் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் சென்னை கொரட்டூரில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்த யோகேஷ் என்ற 41 வயது நபர் சனிக்கிழமை அன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பின் அங்கிருந்த குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரில் குளித்ததாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாக வெளியே வராததால், ஜிம்மில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது யோகேஷ் மயங்கிக் கிடந்துள்ளார்.

அவரை உடனடியாக மீட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக யோகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments