ரூ.2,893 கோடியில் 2023-24ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்

0 1188

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2 ஆயிரத்து 893 கோடி ரூபாயில் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

சென்னை மற்றும் கடலூர் மாநகராட்சிகளில் மழைநீர் வடிகால் அமைக்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்சி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு பங்கு மூலதன உதவியாக 175 கோடியே 33 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தென்காசி, சிவகங்கை, ராமநதபுரம், புதுகோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 25 வட்டாரங்களில் உள்ள ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக 181.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments