ஜெயிலர் வசூலை லியோ முந்தனும்..! தயாரிப்பாளர் சொன்னது என்ன..? போட்டு உடைத்த லோகேஷ் கனகராஜ்

0 5419
ஜெயிலர் வசூலை லியோ முந்தனும்..! தயாரிப்பாளர் சொன்னது என்ன..? போட்டு உடைத்த லோகேஷ் கனகராஜ்

ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் தாண்ட வேண்டும் என்று  தயாரிப்பாளர் லலித்  கேட்டுக் கொண்டதாகவும், ஒப்பந்தத்தில் அப்படியெல்லாம் போடவில்லையே என்று தான் சிரித்துக் கொண்டே கூறியதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் உலகம் முழுவதும் 650 கோடி ரூபாயை வசூலித்ததாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வசூலை விஜய்யின் லியோ முறியடிக்குமா? என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரோ, ஜெயிலர் படத்தின் வசூலை நம்ம படம் முறியடிக்கணும் .. நிறைய பேர் மீம்ஸ் போட்ருக்காங்க என்று தன்னிடம் கூறியதாகவும், அது பார்வையாளர்கள் கையில் இருப்பதாக கூறியதோடு, படம் இவ்வளவு கலெக்சன் ஆகும் என்று அக்ரிமெண்ட் ஏதும் போடவில்லையே என்றும், அப்படி முறியடித்தால் நீங்க ஹெலிகாப்டர் வாங்கி தர்ர மாதிரியும் மீம் போட்டிருப்பதாக சிரித்தபடியே தாம் கூறியதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ரஜினியை ரெக்கார்டு மேக்கர் என்று ஜெயிலர் படக்குழு குறிப்பிட்ட நிலையில் , லியோ படத்தின் டிரைலர் விரைவாக 3 கோடிகளை பெற்று யூடியூப்பில் ஜெயிலர் டிரைலர் பார்வைகளை முந்தியதும் லியோ தயாரிப்பு நிறுவனம் ரெக்கார்டு மேக்கரை காலி செய்து விட்டது போல எக்ஸ் தளத்தில் பதிவு செய்தது குறிப்பிடதக்கது.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் வெளி நாடுகளிலும் ஜெயிலரை போல ஒருசேர வெற்றிக்கொடியை பறக்கவிட்டால் வருகிற 19 ந்தேதி வெளியாகும் லியோ வசூல் சாதனை படைக்கும்.

ஆனால் மலையாளத்தில் லியோவுடன் மோகன்லால் படமும், தெலுங்கில் பாலகிருஷ்ணா, ரவிதேஜா படங்களும், கன்னடத்தில் சிவராஜ்குமார், தர்சன், ரிசப்செட்டி படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் பிற மாநிலங்களில் லியோவுக்கு திரையரங்குகள் கிடைப்பதே பெரும் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் வெளிநாட்டு வசூலை மட்டுமே லியோ படம் நம்பி இருக்க வேண்டிய கடினமான சூழல் ஏற்பட்டுள்ளதால், ஜெயிலரின் வசூலை முறியடிப்பதைவிட போட்ட முதல் விநியோகஸ்தர்களின் கைக்கு வருமா? என்ற பதைபதைப்பில் லியோ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments