14 பேர் பலியான பட்டாசுக்கடை விபத்து குறித்து விசாரணை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1382

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடை வெடிவிபத்து எப்படி நடந்தது என்று விசாரணை நடைபெற்றுவருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பட்டாசுக் கடை வெடிவிபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்களுக்கு தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், தேவைப்படும் பட்சத்தில் காயமடைந்தவர்கள் கர்நாடக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments