இந்திய விமானப்படைக்கு புதிய கொடியை அறிமுகம் செய்தார் விமானப்படைத் தளபதி..
இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய விமானப்படை நிறுவப்பட்டதன் 91-ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்தரப்பிரேசத்தின் பிரயாக்ராஜ்ஜில் உள்ள பம்ராலி விமானப்படை தளத்தில் வருடாந்திர விமானப்படை அணிவகுப்பு விழா நடைபெற்றது.
வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி, இந்திய விமானப்படைக்கு புதிய கொடியை அறிமுகம் செய்தார். புதிய கொடியில், அசோக சின்னம் மற்றும் இறக்கைகளை விரித்தபடி பறக்கும் இமயமலைக் கழுகின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் புதிய கொடி, ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் மூலம் வானில் பறக்கவிடப்பட்டது.
விழாவில் விமான சாகசங்களும், பாராசூட் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், 5 நிமிடங்களுக்குள் ஜீப் ஒன்றை முழுவதும் பிரித்து மீண்டும் அதனை விமானப்படை வீரர்கள் அசெம்பிள் செய்தனர்.
பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்ற இந்த விழாவை விமானப்படை வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
Comments