தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ் பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு 10,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்படும் என்றும் அதனால், அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது என்றும், அந்த 20 மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை அதிகமாக உள்ளது எனவும் அன்புமணி கூறியுள்ளார்.
Comments