நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா வெறும் கண்துடைப்பு - எம்பி கனிமொழி
நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது வெறும் கண்துடைப்பு என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பேசிய அவர் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கி எப்போது முடியும் என்பது தெளிவு இல்லை என்றும், இதனை நடைமுறைப்படுத்த 30 ஆண்டுகாலம் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.
Comments