TTF வாசனுக்கு 10 ஆண்டுகள் பைக் ஓட்ட தடை..! மஞ்சள் வீரனும் கைவிடப்படுகிறது..!

0 23341

பைக் யூடியூப்பர் டிடிஎப் வாசனுக்கு ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால்,அவர் பைக் ரேசராக நடிக்கின்ற மஞ்சள் வீரன் படத்தை தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்து பல்டி அடித்து விபரீத விபத்தில் சிக்கி புழல் சிறையில் கம்பி எண்ணி வருபவர் டிடிஎப் வாசன்..!

கையில் சூலத்துடன் மஞ்சள் வீரன் போஸ்டர் வெளியிட்ட கொஞ்ச நாளிலேயே சாகசம் செய்வதாக நினைத்து சொந்த பைக்கால் சூனியம் வைத்துக் கொண்டார் வாசன் என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் கீழ் கோர்ட்டு மேல் கோர்ட்டு என மனுவுக்கு மேல் மனு செய்து... நீதிமன்றத்தால் நச் என்று தலையில் குட்டு வாங்கியதோடு சரி... ஜாமீன் எங்கேயும் கிடைக்கவில்லை. இதனால் வாசன் நடித்து வந்த மஞ்சள் வீரன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டிடிஎப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக போக்குவரத்து துறை அறிவித்து அவரது தலையில் இடியை இறக்கி உள்ளது. 280 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி ரசிகர்களை கவர்ந்த தங்கத்தால், இனி வரும் காலங்களில் ஹயபுசா இல்லை, காயலான் கடை மொபட் கூட ஓட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோர்ட்டு கேஸூ எல்லாம் சாதாரணம்... யூடியூப்பில் லட்சக்கணக்கில் வருமானம் வருது பார்த்துக்கலாம்.. என்று ஆட்டம் போட்ட வாசன் இந்த முறை வசமாக சிக்கி இருக்கிறார். இனி அவர் சைக்கிள் மட்டுமே ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் நடித்து வரும் மஞ்சள் வீரன் படம் பாதியில் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

படத்தில் பைக் ரேசராக நடிக்கும் வாசன் படப்பிடிப்பு தானே என்று பைக்கில் ஏறினால் கூட போலீசார் இனி கூப்பிட்டு வைத்து வழக்கு போடுவார்கள் என்றும் அதனால் எதற்கு வீண் வம்பு என்று படக்குழு நினைப்பதாகவும் கூறப்படுகின்றது. தரையில் ஆடி ஸ்லிப்பானாலே மாவுக்கட்டு உறுதி, தங்கம் தலைக்கனத்தில் பைக்க வச்சிகிட்டு ரைடு என்று தாறுமாறாக ஆடியதால், லைசன்ஸை ரத்து செய்து எண்டு கார்டு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments