புதுக்கோட்டையில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என அரசுப் பேருந்தை மறித்து பெண்கள் சாலை மறியல்

0 1279

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மகளிர் உரிமைத்தொகை கேட்டு அரசுப் பேருந்தை மறித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டதால், பள்ளி கல்லூரி மாணவர்கள் சரக்கு வாகனத்தில் செல்லும் நிலை ஏற்பட்டது.

ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் அரசுப் பேருந்தும் இந்த மறியலில் சிக்கியதால் அவர்கள் அவதியடைந்தனர். மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பள்ளி மாணவிகள் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர்.

மறியல் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் இதனைக் கண்டு, சரக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments