ஆசிய விளையாட்டு மகளிர் கபடிப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது... இந்தியாவுக்கு 100 பதக்கங்கள்!

0 4834

 

ஆசிய விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் இந்தியா முதல்முறையாக நடப்பு போட்டியில் 100 பதக்கங்களை வென்றுள்ளது.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. நாளையுடன் போட்டிகள் நிறைவுபெறும் நிலையில், பதக்கப்பட்டியலில், 25 தங்க பதக்கங்களுடன் இந்தியா 4-ம் இடத்தில் உள்ளது. இன்று மட்டும் இந்திய அணி 3 தங்க பதக்கங்களை வென்றது. மகளிர் கபடி, வில்வித்தை ஆடவர் மற்றும் மகளிர் தனிநபர் பிரிவில் இந்திய வீரர், வீரங்கனைகள் இன்று தங்கம் வென்றனர்.

இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்களை வென்ற இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் இதயம் பெருமையால் நிரம்பியுள்ளதாக சமூக வலைதளத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். போட்டி முடிந்து தாயகம் திரும்பும் நமது வீரர், வீராங்கனைகளை வரும் 10-ம் தேதி நேரில் சந்தித்து உரையாட ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments