பாசுமதி அரிசியின் ஏற்றுமதி விலையைக் குறைக்க ஆலோசனை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பாக துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பல்வேறு ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
பாசுமதி அரிசி வகைகளை ஆவணப்படுத்தும் பணி நடைபெறுவதாகவும், இப்பணிகள் முடிந்த பிறகு பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான விலை குறைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது 1200 டாலராக உள்ள ஒரு டன் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி விலை 850 டாலராகக் குறையக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments