அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இந்திய வம்சாவளி தம்பதிகள் 2 குழந்தைகளுடன் மர்மமான முறையில் மரணம்

0 2150

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இந்திய வம்சாவளியினரான 2 குழந்தைகளுடன் பெற்றோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.

43 வயதான தேஜ் பிரதாப் சிங், 42 வயதான அவர் மனைவி சோனல் பரிஹார் பத்துவயது மகன் மற்றும் ஆறு வயது மகன் ஆகியோர் தங்கள் வீட்டில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தனர். உயிரிழப்புக்கான காரணம் மர்மமாக இருப்பதால் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீண்ட நேரமாக வீடு பூட்டிக் கிடந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வீட்டை சோதனையிட்டு உடல்களைக் கைப்பற்றினர். தற்கொலையா கொலையா என்று விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments