பப்ஸுக்குள்ள என்ன வச்சீங்க? 3 குழந்தைகளுக்கு வாந்தி , பேதி B2C கேக் மார்ட்டுக்கு சீல்..! பூச்சிகளால் விழுந்த பூட்டு
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்திலிருந்து சேலம் செல்லும் பிரதானசாலையில் உள்ள B2C கேக் மார்ட் என்ற கடையில் பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி பேதியாகி மயக்கம் அடைந்ததால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேக்கரியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பூச்சிகள் வலம் வருவதை கண்டு, கடையை இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்.
பிறந்த நாள் என்பதால் ஆசை ஆசையாய் குழந்தைகளுக்கு பப்ஸ் வாங்கிக் கொடுத்த தந்தை... அதனை சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி பேதியாகி, மயங்கியதால், B2C பேக்கரியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய காட்சிகள் தான் இவை..!
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்திலிருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள B2C கேக்மார்ட் என்ற பேக்கரி உள்ளது. கேரளாவை சேர்ந்த ஹாஜாகுஷேன் என்பவர் நடத்திவரும் இந்த பேக்கரிக்கு மடத்தூரை சேர்ந்த விஷ்வநாதன் என்பவர் தனது 2 வது மகன் யாஷித்தின் பிறந்த நாளையொட்டி தனது 3 குழந்திகளையும் அழைத்து வந்து இந்த பேக்கரியில் அமர்ந்து பப்ஸ் வாங்கி சாப்பிடகொடுத்துள்ளார்
சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்த நிலையில், பேதியாகி மயக்க நிலைக்கு சென்றதால் குழந்தைகளும், விஸ்வ நாதனும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அரிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த பேக்கரியில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். அங்கு விரைந்த அதிகாரிகள் பப்ஸ் ஒன்றில் ஏதோ மெட்டல் இருப்பதை கண்டு கடிந்து கொண்டார்
முறையான பாதுகாப்பின்றி கேக்குகள் மற்றும் பிரட்டுகள், வைக்கப்பட்டிருப்பதை பார்த்த அதிகாரி கடைக்கரரை சத்தம் போட்டார்
கேக்குகளை சுற்று பூச்சிகளும் , எரும்புகளும் சுற்றி வருவதை கண்டு அதிருப்தி அடைந்த அவர் பப்ஸ்களை கைப்பற்றி ஆய்வு எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக கடையை இழுத்துப்பூட்டி சீல் வைப்பதாக கூறி நோட்டீஸ் வழங்கினார்
நல்ல லாபம் வரும் வகையில் விலை வைத்து பொருட்களை விற்கும் பேக்கரிகள், தங்களிடம் உணவு பொருட்களை வாங்கிச்செல்வோரின் உடல் நலம் கருதி தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..!
Comments