அமெரிக்காவில் 6 சதவீதம் ஊதிய உயர்வு கோரி சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

0 1338

அமெரிக்காவில் சுகாதாரத்துறை ஊழியர்கள் 75 ஆயிரம் பேர் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9 மாநிலங்களில், லாப நோக்கமற்ற முறையில் மருத்துவ சேவைகளை வழங்கிவரும் கைசர் பெர்மனண்டே நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர்.

விலைவாசி உயர்வையும், கொரோனா கால பணிச்சுமையையும் சுட்டிக்காட்டி 6 சதவீதம் ஊதிய உயர்வு கோரிவந்த நிலையில், நிர்வாகம் தர மறுத்ததால் பல மாநிலங்களில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் வாகன தயாரிப்பு, திரைத்துறை, மருத்துவத்துறைகளைச் சேர்ந்த 3 லட்சம் ஊழியர்கள் இந்தாண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments