சென்னை உலக கோப்பை போட்டியை காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

0 4916

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காணச்செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வரும் 8ம் தேதி, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி உள்பட 5 போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன.

இதற்காக மைதானத்தை சுற்றி உள்ள சாலைகளில் பழுதை சரி செய்து, தூய்மை படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

மைதான சுற்றுச்சுவர்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பக்கிங்ஹாம் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு, மீண்டும் குப்பைகள் தேங்காதவாரு ஃபில்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போட்டியை காண மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் 2 கட்ட சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்கு 2 ஆயிரம் போலீசாரை நிறுத்த முடிவு செய்துள்ள சென்னை பெருநகர காவல்துறை, பாதுகாப்பு சோதனைக்கு, 300 தனியார் பணியாளர்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments