அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து வளர்ப்பு நாயை வெளியேற்றினார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் வெள்ளை மாளிகை ஊழியர்களை அடிக்கடி கடித்து விடுவதால் அவர் அதனை அங்கிருந்து வெளியேற்றினார்.
கமாண்டர் என பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் 2 ஆண்டுகளுக்கு முன் குட்டியாக இருந்தபோது வெள்ளை மாளிகைக்கு அழைத்து வரப்பட்டது.
அங்குள்ள ஊழியர்களையும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் உளவுத்துறை அதிகாரிகளையும் அது அடிக்கடி கடித்துவிடுவதாகப் புகார்கள் எழுந்தன.
உளவுத்துறை அதிகாரிகள் மட்டும் 11 பேர் கடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையில் நிலவும் பதட்டமான சூழலால் நாய்கள் பொறுமையிழந்து கடிக்க தொடங்குவதாக விளக்கமளித்துள்ள பைடன் தம்பதியர் அதனை அங்கிருந்து வெளியேற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments