அமெரிக்காவில் 16 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண் செவிலியர் 690 ஆண்டு சிறை தண்டனை

0 1145

அமெரிக்காவில் 16 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண் செவிலியருக்கு 690 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், வேலைக்கோ, வெளியூருக்கோ செல்லும் பெற்றோர் வீட்டில் தனியாக உள்ள குழந்தைகளை பராமரிக்க செவிலியர்களை நியமிப்பது வழக்கம்.

அத்தகைய செவிலியர்களுக்கான இணையதளம் மூலம் மேத்யூ ஜாக்ஜெவ்ஸ்கி என்பவரை 2019ம் ஆண்டு கலிபோர்னியா மாநில தம்பதி தங்கள் 8 வயது மகனை பராமரிக்க நியமித்தனர்.

சிறுவனிடம் ஜாக்ஜெவ்ஸ்கி தவறாக நடக்க முயன்றதாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், 5 ஆண்டுகளில் 16 சிறுவர்களுக்கு அவன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளது தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கலிஃபோர்னியா நீதிமன்றம், ஜாக்ஜெவ்ஸ்கி செய்தது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்று கூறி அவர் மீது நிருபிக்கப்பட்ட 34 குற்றங்களுக்காக 690 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments