தைவான் தெற்கு பகுதியை 252 கி.மீ. வேகத்தில் தாக்கியது சூறாவளி முன்னெச்சரிக்கையாக அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் மூடல்
தைவான் தீவு நாட்டை தாக்கிய கொய்னு சூறாவளியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பசிபிக் கடலில் கடந்த வாரம் உருவான சூறாவளி மெல்ல நகர்ந்து கெங்சுன் மாகாணத்தை மணிக்கு 252 கிலோ வேகத்தில் தாக்கியது. இதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கொய்னு சூறாவளி கரையை கடந்தபோது கடல் கோசியங் துறைமுக பகுதியில் கடல் அலைகள் பொங்கி எழுந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட போதிலும் ஒருவர் உயிரிழந்ததாகவும் 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments