வீலிங் செய்து... மாடு மீது பழிபோட்ட TTF வாசனுக்கு ஆப்படித்த கோர்ட்டு பைக்க எரிக்க சொன்ன நீதிபதி..! தங்கத்தின் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை

0 2397

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து விழுந்த விபத்து நடந்ததாக கூறி ஜாமீன் கேட்ட டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், விளம்பரத்துக்காக செயல்படும் டி.டி.எஃப் வாசனின் யூடியூப் சேனலை மூடுவதோடு, விபத்துக்கு காரணமான அவரது பைக்கையும் எரித்து விடும் படி கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாரின் ஹெல்மெட்டும்... பாதுகாப்பு உடையும் இருக்கும் தைரியத்தில் நெடுஞ்சாலையில் வீலிங் செய்து வண்டியோடு பல்டி அடித்து விபத்தில் சிக்கிய பைக் யூடியூப்பர் டிடிஎப் வாசனை கைது செய்த
பாலுச்செட்டி சத்திரம் போலீஸார்,அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

ஜாமீன்கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு தள்ளுபடியானதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் டி.டி.எஃப் வாசன். இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில், கால்நடைகள் சாலையை கடந்ததால் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தின் முன் சக்கரம் தூக்கியதாகவும், பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என டி.டி.எஃப் வாசன் தரப்பில் கூறப்பட்டது.

விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிறையில் உரிய சிகிச்சை பெற முடியாததால் புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், தான் ஒரு அப்பாவி என்றும், டி.டி.எஃப் வாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காவல்துறை தரப்பிலோ, யூடியூபில் 45 லட்சம் லட்சம் சிறார் டி.டி.எஃப் வாசனை பின் தொடர்கிறார்கள், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கிறார் என தெரிவித்தனர். டி.டி.எஃப் வாசன் அதிவேகமாக செல்லும் பைக் வீடியோவை பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் அதிக விலையுள்ள பைக்கை வாங்கி கேட்டு, இதுபோன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள், இதற்காக சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள் என தெரிவிக்கபட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள டி.டி.எஃப் வாசனின் செயல் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

டி.டி.எஃப் வாசனின் கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன். மனுதராரின் யூடியூப் தளத்தை மூடிவிட்டு, விபத்தில் சிக்கிய அவரின் பைக்கை எரித்து விட வேண்டும் எனவும் தனது கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments