புராவங்ரா கட்டுமான நிறுவனத்தில் நிலம் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்த புகாரில் வருமானவரித்துறையினர் சோதனை

0 2493

அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு நிலம் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சென்னையில் உள்ள புராவங்ரா கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் புராவங்ரா நிறுவனம் சென்னையில் பள்ளிக்கரணை, கிண்டியில் 3 திட்டங்களில் சொகுசு வில்லாக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.

வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் பெங்களூரில் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறையினர் அதன் தொடர்ச்சியாக சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 10 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments