மணிப்பூரில் மாணவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது
மணிப்பூரில் இரு மாணவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி நடத்தப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
மாணவர்கள் கொலை தொடர்பாக குக்கி ஸோ இனத்தைச் சேர்ந்த 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்யதனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி சுராசந்த்பூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு பழங்குடியின தலைவர்கள் மன்றம் திங்களன்று அழைப்பு விடுத்திருந்தது. இரண்டு நாட்களாக நடந்த போராட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இந்நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக பழங்குடியின தலைவர்கள் மன்றம் அறிவித்துள்ளது. மேலும் நிலைமையை தொடர்ந்த கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் தீவிரமான போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Comments