இந்திய விமானப்படைக்கு வரும் ஆண்டுகளில் 156 இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்கத் திட்டம்... விமானப்படை தலைமைத் தளபதி தகவல்

0 850

இந்திய விமானப்படைக்காக வரும் ஆண்டுகளில் 156 இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ராணுவத்துடன் இணைந்து கையெழுத்திட உள்ளதாக விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 8ம் தேதி விமானப்படை தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்த மதிப்பு 45 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், 70 HTT-40 ரக பயிற்சி விமானங்களுக்கான 6 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதே போல் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட தளவாடங்கள் வாங்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்ட சவுதாரி, இந்த ஒப்பந்தங்கள் ஏறக்குறைய ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவும் பாகிஸ்தானும் தொழில்நுட்பத்தை மாற்றுவதைக் குறிப்பிட்ட சவுத்ரி, இரு நாடுகளுக்கு இடையிலான முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments